Friday, September 2, 2011

அவனும் அவளும்

So what do he and she feel in deep inside their hearts? here are few lines untold but understood by both.

-------




இன்று நான் சூடிய பூவை
நாளை நீ சூட்ட ஆசை !
சூட்டிய கை அணைத்து
உன் தோள் சேர ஆசை !

பூச்சூட்ட நேரமில்லை
புரிந்து கொள் பெண்ணே !
நேரமிருந்தால் நீ நேரிலில்லை
என் செய்வேன் கண்ணே !

காலம் வரும் காத்திருப்போம்
பொறுமையுடன் நாம் !
காலம் வந்தால் கனவுகள்
கனிந்துவிடும், ஆம் !

வருங்காலம் வசந்தமாக
இன்றே முனைந்திடுவேன் !
வசந்தங்கள் வருகையில்
மலர்மாலை உனக்கிடுவேன் !

------------------


The obvious fact of which lines are spoken by 'him' and which by 'her' is left unsaid.