முள்ளாய்க் குத்தும் மெத்தை
நீ அருகே இல்லாமல் ..
தலையணை மறுக்கும் உடல்
உன் மார்பில் சாயாமல் ..
போர்வை வேண்டாம் அன்பே
உன் கரம் குளிர் விடுவிக்கும் ..
பாராவிடினும் அரவணைப்பை
உன் வார்த்தை இங்கு கொடுக்கும்..
உன்னை நினைக்கும் நேரத்தில்
கண்கள் தானாய்ப் பனிக்கும்..
உன்னுடன் மட்டும் தான்
என் வாழ்க்கை என்றும் இனிக்கும் !