Thursday, December 13, 2007

யாதுமாகி நின்றாய்!

கண்ட நாள் முதல்
கண்களில் குடி்புகுந்தாய்
கருவிழிகளில் கலந்திட்டாய்!
என்னில் உன்னைப்பார்க்கவோ?
உன்னில் என்னைப்பார்க்கவோ?


முதற்பார்வையில்-
முன்னிரவுத்தூக்கம் பறித்தாய்!
புன்சிரிப்பினில்-
பின்னிரவுத்தூக்கம் கெடுத்தாய்!

எனக்குள் நானே சிரிக்க வைத்தாய்!
உன்னில் என்னைத்தொலைக்க வைத்தாய்!
என்னை எனக்குள் தேட வைத்தாய்!
உன்னை என்னுள் ஒளித்து வைத்தாய்!

கண்ணில் தேடல் தொடங்கியதும்
கனவும் அதன் வழி சென்றிடுதே!
கனவைக்கருவாய் நினைத்து வந்தேன்
கருவிலும் கலந்து என் கனவானாய்!

தொட்டால் சிணுங்கும் குணம்-அதையும்
உன் தீண்டல் சாம்பல் ஆக்கிடுதே!
தீண்டாவிடினும் தீண்டியதாய்
தறி கெட்ட நெஞ்சம் நினைத்திடுதே!

உயிர் கூறும் வார்த்தைகள் கேட்கிறேன்
உனையே உயிராய் நினைக்கிறேன்
உயிர் வரை உள் நோக்கித் தேடுகிறேன்
உனையன்றி எதுவும் தெரியவில்லை!

சிரிப்பால் சிந்தையால் சிறகு தந்தாய்-உன்
சொல்லால் செயலால் சிறை பிடித்தாய்
மீள வழியுண்டாம் மனச் சிறையினின்று
மீளவும் மனம் தான் இடம் தருமோ?

கண்ணும் கண்ணும் நோக்குகையில்
வாய்ச்சொல்லில் என்ன பயன்?
கண்ணும் கண்ணும் கலந்த பின்னே
காத்திருந்து என்ன பலன்?

கனவாய் நினைவாய்
கண்ணாய் மணியாய்
உடலாய் உயிராய்
மனமாய் மொழியாய்
இரவாய்ப் பகலாய்
இமையாய் விழியாய்
சரியாய்த் தவறாய்
வழியாய் வாழ்வாய்

---யாதுமாகி நின்றாய்!

4 comments:

  1. கல்லில் செதுக்கியாற்போல் நிலையாய் நின்றாய்
    என்றும் மறையாமல் என்னொடு இருந்தாய்
    என்நிலை குலைந்து நான்விழும் தருணம்
    எனைநின் கரங்களால் தாங்கி நின்றாய்.

    இருதயம் இரண்டெனினும் துடிப்போ ஒன்று
    பாதை இரண்டெனினும் பயணம் ஒன்று
    உள்ளம் இரண்டெனினும் உணர்வோ ஒன்று
    மெய்யோ இரண்டெனினும் உயிரோ ஒன்று

    உனை நான் தேடினேன் ஞாலமெங்கும்
    எனை நான் வருத்தினேன் என்றென்றும்
    உனை நான் கண்டேன் என்னுள்ளே
    எனை நான் தொலைத்தேன் உன்னுள்ளே

    அன்பெனும் சிறையில் அடைத்து வைத்தாய்
    பாசமேனும் கயிற்றால் கட்டி வைத்தாய்
    சிறையிலிருந்து விடுதலை நான் வேண்டேன்
    கயிறுதனை விலக்கிட நான் விழையேன்

    நீயும் இருப்பாய் எனைபற் றிடவே
    நானும் இருப்பேன் உனையணைத் திடவே
    உனைநான் தாங்கிட எனைநீ தாங்கிட
    தொடர்வோம் நாம்நம் பயணம் தனையே

    ReplyDelete
  2. @eskay:-

    thanks for ur poetic comment.didn't expect it though(as a poem and also this soon:)

    there's surely no escape for u.u r sentenced to be my friend for ever.:)

    ReplyDelete
  3. The lines i liked in your poem, are embedded in mine. So are you.

    உன்னில் என்னைத் தொலைக்க வைத்தாய்!
    என்னை எனக்குள் தேட வைத்தாய்!
    உன்னுள் தொலைத்து என்னுள் தேடி ,
    நம்முள் கண்டேன் என்னையும் உன்னையும் .

    என்னில் உன்னைப் பார்க்கவோ அல்லது
    உன்னில் என்னைப் பார்க்கவோ நானும்
    என்றும் சிறிதும் விழைந்தேன் அல்லேன்
    நம்முள் நாம்பார்க்க மனமும் வேண்டியதே .

    மீள வழியுண்டாம் மனச் சிறையினின்று
    மீளவும் மனம் தான் இடம் தருமோ?
    மீளவே மனமது இடம் தந்தாலும்
    உயிர்தான் நிலைத்து நின்றிடுமோ ?

    கண்ணும் கண்ணும் கலந்த பின்னே
    காத்திருந்து என்ன பலன்?
    விண்ணும் மண்ணும் கடந்து நாமும்
    சேர்ந்திருக்கும் வாழ்வே பயன் .

    ReplyDelete
  4. @eskay:-hey! thats differnt! so i understand the 1st 2 lines of each stanza r the lines u liked in my poem---my piece....and the next 2 of every stanza r ur own creations..(or feelings??!)

    thanks once again!

    ReplyDelete

feel free to tell what you want!