விட்டுச் சென்றால்
வெறுப்பேன் என்றும்
கனத்த மனதோடு
அழுவேன் என்றும்
உன் நினைவுப் பிடியின்
விசைஈர்ப்பு வீச்சில்
விசைஈர்ப்பு வீச்சில்
சிக்கித் தவித்து
சிறகை இழந்து
வீழ்வேன் என்றும் நினைத்தாயோ?
வெற்றுப் பாதையில்
வெறுமையாய் வீற்றிருக்கும்-என்
வேர்கள் இல்லா
மரங்களின் நிழலில்
என்னை நானும் காண்பேன் !
பேச இயலாத் தருணங்களில்
பேசிக்கொண்ட மௌனங்களின்
பெயரைச் சொல்லி
எனக்குள் நானே
புன்னகை செய்வேன் !
பூத்துக்குலுங்கும் புதுமலர் போலே
புதிதாய்த் தினமும் பிறப்பேன் !
வாழத்துடிக்கும் மனதினுள்
வாழ்த்தை நானும் விதைப்பேன் !
உன்னுடன் கழித்த நேரங்களை
உன்னுடன் களித்த பொழுதுகளை
மெலிதாய் எண்ணி
மெதுவாய்ப் பருகி
என்னை நானே உயிர்ப்பிப்பேன் !
நாவின் நுனியில்
நின்று அடம்பிடிக்கும்
சொல்ல நினைத்த எண்ணங்களை,
சொல்ல முடியா ஏக்கங்களை
எனக்குள் நானே விழுங்குவேன் !
சிதறிப் போனச் சுவடுகளை
அள்ளி எடுத்துக்
கட்டி அணைத்துக்
கொஞ்சி முத்தமிட்டுக்
கொஞ்சமாய் நானும் மகிழ்வேன் !
இப்படித்தான் !
ஒவ்வொரு நாளும்
சங்கமம் ஆவோம் !
நீ விட்டுப் போன நானும்
நான் விட்டுக்கொடுக்காத நீயும் !!
sindhuja,
ReplyDeletewhy did u feel this poem din deserve an "amazin" from ramya??? it surely deserves man!!! its truly AMAZIN!!!! n wats more amazin is de fact tat u wrote dis in half hour!! wow.. i noe how u get such brains!! after all, u r my frnd na ;) keep t goin dear!!! i'm always here to say amazin for all ur endeavours!!! luv ya loads!!!
@ramya
ReplyDeletethat was simply sweet! i felt that way because i got an unexpected comment from an expected person...
thanks!keep coming!
//பேச இயலாத் தருணங்களில்
ReplyDeleteபேசிக்கொண்ட மௌனங்களின்
பெயரைச் சொல்லி
எனக்குள் நானே
புன்னகை செய்வேன் //
அழகான கற்பனை ....மௌனனங்களுக்கு எது பெயர் ? புரியவில்லை
நானும் ஒரு வலைபூ வளர்க்கிறேன்...பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.com
-கார்த்தி
மௌனங்களால் பேச முடியுமெனில்
ReplyDeleteமௌனத்திற்கு பெயர் இருக்க இயலாதா?
நன்றி!
சிந்துஜா
//நீ விட்டுப் போன நானும்
ReplyDeleteநான் விட்டுக்கொடுக்காத நீயும் !! //
புரிதலின் வெளிபாடாய்...அருமையான கவிதை என்றால் சாதாரணமாக இருக்கும். என்ன சொல்ல... எப்படி சொல்ல... வாழ்த்துக்கள்!
@அன்புமணி :
ReplyDeleteமிக்க நன்றி !
sooper :)
ReplyDeletethanks Bhoomi :-)
ReplyDelete