Monday, February 16, 2009
சுவடுகள்
கனவினைக் கண்டான் ஒருவன் ஓரிரவில்
கடவுளுடன் கடற்கரையில் காலாற நடப்பதாக
கனவினைக் கண்டான் ஒருவன் ஓரிரவில் !
வானிலே கண்டான் தன் வாழ்வின் காட்சிகளை
இரு ஜோடி காலடிச்சுவடுகள் கண்டான் மண்மீதினில்
ஒன்று அவனது மற்றொன்று இறைவனது !
வாழ்வின் பல நேரங்களில் அவன் கண்டான்
ஒரு ஜோடிச் சுவடுகள் மட்டும் .
அது போன்ற நேரங்களே
தாழ்மையுற்று வருந்தியவை
என்றவன் அறிந்தான் !
இறைஞ்சினான் இறைவனிடம்
"இறையே ! நான் உம்மைத் தொடர்ந்தால்
நீர் என்னுடன் உலா வருவீர் என்று விளம்பினீர்.
சோதனைக் காலத்தில்
ஒரு ஜோடிச் சுவடுகள் மட்டுமே இருந்தன !
தங்களின் அண்மையை நாடிய நேரங்களில்
எம்மை விட்டு அகன்றீரே !"
இறைவன் இயம்பினான் -
"என்னருமைக் குழந்தாய் !
யாம் உன் மேல் கொண்ட அன்பினை
நீ அறிய மாட்டாய்.
துன்பத்தின் உச்சியில்
ஒரு ஜோடிச் சுவடுகள் கண்டாயே !
அன்றெல்லாம் நான் உன்னை
ஏந்தி இருந்தேன் !!"
Subscribe to:
Post Comments (Atom)
nice adaptation..! :)
ReplyDelete2 ani:
ReplyDeletethanks.
did it in 8th. My M.I. ma'm asked me to translate :-)
அருமை
ReplyDeleteadengappa!! :D
ReplyDelete@திகழ்மிளிர்:
ReplyDeleteநன்றி !
@ sri:
ReplyDelete:-)