Monday, May 11, 2009

ஈழனின் குரல் !


பணியின் நிமித்தம்
வெளியூர் மாற்றலை வெறுத்து
வீட்டை விட்டு சொகுசாய்ப் போகிறீர்
அலுவலராய் நீங்கள் !

வலியைப் பொறுத்து
கூட்டை விட்டுப் பிய்த்தெறியப்பட்டு
வெற்றிடம் நோக்கி
அழையா விருந்தாளியாய்ப் போகிறோம்
அகதிகளாய் நாங்கள் !

எம் குலப் பெண்களை
நிர்வாணப்படுத்தி அலைய விடுகையில் -உங்கள்
நிவாரணத் தொகை என் செய்யும்?

மானம் இழந்து
மாண்ட தாயின்
மார்புக் காம்பில்
பால் குடிக்கும்
பிள்ளையை ,

ஆசையாய் மணமுடித்த கணவனை
அநியாயமாய்ப் பறிகொடுத்து
விண்ணை வெறிக்கும்
கைம்பெண்ணை,

நோயால் துடிக்கும்
பெற்றோரை,
இரத்தம் பார்த்து அழும்
குழந்தையை,

மனம் நொந்து
மரண பயத்தில் உள்ள
மனைவியை ,

வெடிகுண்டால் கைகள்
வெட்டுண்ட தமயனை,

கயவர் கண் பட்டால்
அஞ்சி நடுங்கும்
தங்கையை,

இறையாண்மை பேசச் சொல்கிறீரோ?

இப்படித்தான்
அனுதினமும் நோகடிக்குமெனில்,

உங்கள் இறையாண்மையினும்
அணுகுண்டால் அன்றே கொல்லும்
இவர்கள் தீவிரவாதமே மேல் !

No comments:

Post a Comment

feel free to tell what you want!