Wednesday, July 8, 2009

யாசகம்

உள்ளத்தில் உண்மையாய்
உறைந்த அன்பை
ஒற்றை நொடியில்
உன் வார்த்தையில் வெளிக்கொணர
உன் மௌனத்துடன்
நான் படும் பாடு
முயற்சியின் உச்சம் !

அன்பை யாசிக்கும் நெஞ்சை
சமாதானம் செய்ய
அரைநொடியில்
நீ கூறும் சொற்கள்
லட்சத்தில் சொச்சம் !

எதிர்பார்ப்பேன் என்றறிந்தும்
இயல்பாய் இருந்து
மனதைக் கனியவைக்கக்
கெஞ்சியும் கொஞ்சியும்
ஊடல் பொழுதாக்கி
சண்டையிட்டும்
பொய்க் கோபம் காட்டியும்
வராத வார்த்தை,
கூறாத சொல் ,
அழைக்காத அன்பு,
காட்டாத காதல்,
என்றோ எதிர்பாராமல்
கிடைக்கும் தருணம்
திகட்டும் இன்பம் தரும்வேளை
எடுத்துக் கூறும்
தானாய் சிந்தும்
என் சந்தோஷக் கண்ணீரின் மிச்சம் !

No comments:

Post a Comment

feel free to tell what you want!