Monday, October 12, 2009

மாற்றம்

மகிழ்ந்திருந்தேன்
சிரித்திருந்தேன் ..

சிறு விஷயத்திற்கும்
அதிசயித்து
"அட ! அப்படியா?" என்றது
பெரிய செய்திக்கும்
அக்கறையின்றி
"ஓ...அப்படியா.. " என்றும் ,

யாருக்கு அன்பு அதிகம் என்ற போட்டி
யாருக்கு வெறுப்பு அதிகம் என்றும்,

பிரிவுத் துயரம் நீங்கி
சேர்தலே துயர் என்றும்

அன்று என்னிடம் உனக்குப் பிடித்தவை
இன்று என்னிடம் நீ வெறுப்பவையாய்,

நம்மிடம் நமக்குப் பிடித்தவை மறைந்து
"நாம்" என்பதே கேள்விக்குறியாய்,

... மாறுவதற்கு
இடைப்பட்ட காலத்தில் ...

மகிழ்ந்திருந்தேன் !
சிரித்திருந்தேன் !

No comments:

Post a Comment

feel free to tell what you want!