அந்நாள்
அழகாய்ப் பதிந்தது
நெஞ்சில் !
ஊணில்லை
உறக்கமில்லை
உதட்டில் புன்னகையும்
உள்ளத்தில் வேண்டுதலும் - அன்றி
வேறேதுமில்லை !
ஆழ் மனதில்
அடி வைத்து
அரியணை போட்டு
அமர்ந்தாய் - வாழ்வின்
ஆதராமானாய் !
கண்கள் கண்ட கற்பனையோ
கனவில் கலந்த கருத்திதுவோ
கழற்ற விழையா கலனோ
அறியாச் சிறுமி நான்
புரியா நடையில் - இங்கே
கிறுக்குகிறேன் !
விலகிய முகிலால்
தெளிந்த விண்ணில்
தெரிந்த நிலவில்
மனம் லயிக்க,
அத்திப் பூத்த
அந்நாள்
அழகாய்ப் பதிந்தது
நெஞ்சில் !