அந்நாள்
அழகாய்ப் பதிந்தது
நெஞ்சில் !
ஊணில்லை
உறக்கமில்லை
உதட்டில் புன்னகையும்
உள்ளத்தில் வேண்டுதலும் - அன்றி
வேறேதுமில்லை !
ஆழ் மனதில்
அடி வைத்து
அரியணை போட்டு
அமர்ந்தாய் - வாழ்வின்
ஆதராமானாய் !
கண்கள் கண்ட கற்பனையோ
கனவில் கலந்த கருத்திதுவோ
கழற்ற விழையா கலனோ
அறியாச் சிறுமி நான்
புரியா நடையில் - இங்கே
கிறுக்குகிறேன் !
விலகிய முகிலால்
தெளிந்த விண்ணில்
தெரிந்த நிலவில்
மனம் லயிக்க,
அத்திப் பூத்த
அந்நாள்
அழகாய்ப் பதிந்தது
நெஞ்சில் !
நல்ல கவிதை. பொன்னியின் செல்வனைப் பற்றி தேடியபோது உங்கள் பக்கத்தை பார்த்தேன்.
ReplyDeleteசும்மா அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்தபோது பொன்னியின் செல்வன் 'மணிமேகலை' மாதிரி உருகி உருகி எழுதிய கவிதைகளைப் படித்தேன்
அனைத்துமே நன்று. நல்வார்த்தைகள் நல்வரிகள்.
சோகச்சுவையா இருக்கே, சரி ஆங்கிலத்தில என்ன சொல்லி இருக்கீங்கன்னு பார்த்தா, உங்கள் மனம் 'பழுவூர் இளையராணி' போல் நிலையில்லாமல் இருகிறதோன்னு தோணுது.
நீங்க மணிமேகலையா நந்தினியா... :)
@karthigeyan: மிக்க நன்றி !
ReplyDelete