Saturday, January 11, 2014

காதல் கேள்வி


தூர தேசத்தில்
தூக்கம் துறந்து - உன்
துன்பத்தில் துடித்து
தோள் கொடுத்து 
தன் வாழ்வை உன்னிடம் 
தந்தவளை 
துச்சம் என நினைத்தாயோ ?
தூக்கி எறியத் துணிந்தாயோ?

பல காலம் 
பகல் இரவு பாராமல் 
பேசித் தீர்த்த காதல் அன்றோ ? -இன்று 
பேசித் 'தீர்ந்த' காதல் ஆனதோ ?

                           
Source: cartelthemes.com

கண்ணின் கடைசி துளி நீர் கறைய
காதல் பெருக்கெடுத்து
கை பிடிப்பேன் என்று
கட்டி முத்தமிட்டவளை
கத்திக் கூச்சலிடாமல்
கை விட நினையாமல்
காப்பவன் அன்றோ  காதலன் ?

கண்ணீர்  மல்க
கால் கடுக்கக்  காத்திருந்து
கையேந்த  வைப்பதற்கோ
கெடு கொடுத்தாய் ?

கண்டு  வருவதல்ல காதல்
காணாமல் கண் துடிப்பதுவே காதல் !


2 comments:

  1. Intense. I wish the girl a speedy recovery, if she wishes to recover, that is.

    ReplyDelete
  2. @Bhargavi: Inspired from a Tamil short story I read. I shall share the link if I find it online! Thanks :)
    Sindhuja

    ReplyDelete

feel free to tell what you want!