முழங்காலிட்டு
கட்டியணைத்து
முகம் புதைத்தேன்
அடங்கவில்லை கண்ணீர்
ஆறவில்லை வடு
இதழ் விரித்து
சிரிக்க முயன்றேன்
மனம் செய்தது
ஒத்துழையாமை இயக்கம்
உடல் ஆனது
உதிரமில்லா மரம்
நடுசாமம் ஆனதில் அறிந்தேன்,
பறிபோனது முன்னிரவுத் தூக்கம் .
அழுத கண்கள்
நனைந்த தலையணை
சிறகுடைந்த சிந்தனை
அலைமோதும் எண்ணங்கள்.
இவற்றுடன் கழிந்தது,
எப்போது அயர்ந்தேன்
என்றறியாத
என் பின்னிரவுத் தூக்கம் .
இதுவல்ல
நான் விரும்பும் உறக்கம்!
No comments:
Post a Comment
feel free to tell what you want!