Tuesday, May 13, 2008

தேடல்


மண்ணுக்குள்ளே தேடு மணிவைரம் கிடைக்கும்

மனதினுள்ளே தேடு உன் திறமை கிட்டும்

கண்ணுக்குள்ளே தேடு கண்மணி தெரியும்

கனவினுள்ளே தேடு உன் இலக்குப் புரியும்

ஊருக்குள்ளே தேடு உத்தமர் பலர் உளர்

உன்னுள்ளே தேடு உண்மைகள் பல உள

உன் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும் போது

சிதைவுகளுக்கிடையே தேடு

இடிபாடுகளுக்குள்ளே புதைந்திருக்கும்-ஒரு

பொன்னான வாய்ப்பு உன் கண்ணில் படும்

தேடு...தேடு...

தேடிக்கொண்டே இரு

எல்லா இரவும் விடியும்

உன்னால் எதுவும் முடியும்


No comments:

Post a Comment

feel free to tell what you want!